கரூர் மாவட்டம் – ஜூலை – 14
கரூர் உப்பிடமங்கலம் பேரூராட்சி பத்தாவது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் மனு…
கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பத்தாம் வார்டு பகுதியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.
அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கரூர் கிழக்கு மாவட்டம் கோமதி விடுதலை மகளிர் அணி மாவட்ட துணை செயலாளர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் அவர்களிடம் இந்த பகுதிக்கு அடிப்படை வசதி செய்து தரக் கோரி கோரிக்கை விடுத்தனர்.
அதனை தொடர்ந்து சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் அந்தப் பகுதிக்கு அடிப்படை வசதி செய்து தரக்கோரி கரூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை மனு அளித்தார்.
அதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சந்திரசேகர் மற்றும் கரூர் கிழக்கு மாவட்டம் விடுதலை மகளிர் அணி மாவட்ட துணை செயலாளர் கோமதி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக இன்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என மாவட்ட ஆட்சி தலைவர் உறுதி அளித்தார்.