கிருஷ்ணகிரி,மே.4- பாரதிய ஜனதா கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு ஆலோசனையின் பேரில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை பக்கம் அமைக்கப்பட்டுள்ள திமுக கொடி கம்பத்தை அகற்ற பாரதிய ஜனதா கட்சியின் கிருஷ்ணகிரி நகர தலைவர் கே. விமலா, மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் குமாரை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியதாவது: சமீபத்தில் மதுரை கிளை நீதிமன்றம் அனைத்து கட்சி கொடி கம்பங்களும் பொது இடங்களில் இருந்தால் அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.இன்று வரை கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை பக்கம் உள்ள திமுக கொடிக்கம்பம் அகற்றப்படாமல் அப்படியே உள்ளது. மேலும் அண்ணா சிலை முன்பு ஆட்டோ நிறுத்தும் அருகில் மாமிச கடை நகராட்சியின் அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த மாமிச கடையும் உடனே அகற்ற வேண்டும். முறைகேடாக செயல்படும் கடைகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.நகர பொதுச்செயலாளர் பாலாஜி, நகர பொருளாளர் சக்திவேல், நகர செயலாளர் ஒசாமா ஆகியோர் உடன் இருந்தனர்.
திமுக கொடி கம்பத்தை நீதிமன்றம் உத்தரவு படி அகற்ற பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோரிக்கை மனு

Leave a comment