நாகர்கோவில் ஜன 7
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 397 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சியர் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.4.5 கோடி வங்கி பெருங்கடனுக்கான காசோலையினை வழங்கினார்.
நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்
பாலசுப்பிரமணியம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு,
பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் பத்ஹூ முகமது நசீர், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி,
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல
அலுவலர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், அரசு
அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.