இளையான்குடி: டிச: 17
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் குப்பணேந்தல் காமராஜர் நகர் காலணியில்
36 குடும்பங்கள் அருந்ததியர் சமூக மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் 20 ஆண்டுகாலமாக பெற முடியாத அடிப்படை வசதிகளைப் பெற மாவட்ட ஆட்சியரிடம்
5 வது முறையாக மனு கொடுத்தனர்.
இந்த பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலைகள் குண்டும் குழியுமாக மிகவும் சேதமடைந்துள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் மற்றும் மின் வயர்கள் சேதமடைந்த நிலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.எனவும்
அந்த பகுதியில் 2 கிலோமீட்டர் தூரம் சென்று குடி தண்ணீர் குடம் 10 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் தண்ணீர் வண்டி க்காரர்கள் சாலை மிகவும் மோசமாக உள்ளதால் எங்கள் ஊருக்குள் வர மறுக்கின்றனர் எனவும் கூறுகின்றனர். பொதுக்கழிப்பறை இன்றி பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
ஆகையால் குடியிருப்பில் சாலைகளை சீரமைக்கவும் மின் கம்பங்களை சரி செய்ய வேண்டும் எனவும் குடி நீர் குழாய் மற்றும் பொது கழிப்பறைகள் கட்ட வேண்டும் எனவும்
மேலும் குடியிருப்பிற்கு சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும். சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சோணையா கோவிலில் பேவர் பிளாக் தளம் கலையரங்கம் முதலியவை அமைத்து தருமாறு அருந்ததியர் கிராம பொது மக்கள் சார்பாக கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும் இதுவரை மாவட்ட ஆட்சியரிடம் 4 முறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை எனவும் கூறுகின்றன. மனு கொடுத்தவுடன் அதிகாரிகள் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். ஆனால் மீண்டும் வருவது கிடையாது எங்களுக்கு எந்த ஒரு நலத்திட்டங்களையும் செய்து கொடுக்கவில்லை எனவும் கூறுகின்றனர். இந்த முறை 5 தடவையாக மனு கொடுத்து இருக்கிறோம் .இந்த தடவையாவது எங்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற மாவட்ட ஆட்சியர் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.