தூத்துக்குடியில் கலைஞர் நினைவு நாளையொட்டி அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் வடக்கு மாவட்ட செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் அமைதி ஊா்வலம் நடைபெற்றது. மார்க்கண்டேயன் எம்எல்ஏ, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்துடன் அமைதி ஊர்வலம் அண்ணா நகரில் இருந்து புறப்பட்டு நான்காம் கேட் குறிஞ்சிநகர் வழியாக எட்டையாபுரம் சாலையில் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தை சென்றடைந்து, அங்குள்ள கலைஞர் சிலைக்கும் அலங்காிக்கப்பட்ட படத்திற்கும் வடக்கு மாவட்ட அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர் ரவிந்திரன், துணை மேயர் ஜெனிட்டா, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூாி, நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஐயாத்துரை பாண்டியன், மாநகர துணைச்செயலாளர்கள் கீதா முருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், ரமேஷ், அந்தோணி ஸ்டாலின், அன்பழகன், கவிதாதேவி, குபேர்இளம்பாிதி, சீனிவாசன், அபிராமிநாதன், ராமலட்சுமி, விஸ்வநாத் ராஜா, பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜ், ஜோஸ்பர், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், துரை, முத்துராமலிங்கம், புஷ்பராஜ், மகளிர் அணி ரேவதி, சத்யா, கருணா, மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.