ஈரோடு அக் 6
ஈரோடு டாக்டர் ஆர்.ஏ.என். எம். கலை மற்றும் அறிவியல் கல் லூரியில் கல்லூரி பேரவை மற் றும் தமிழ் பேரவை தொடக்க விழா நடைபெற்றது
இதில் சிறப்பு விருந்தினராக ஸ்டாலின் குணசேக ரன் கலந்து கொண்டு பேசினார் அப்போது அவர் பேசியதாவது:
தற்போது உலகின் பல நாடுக ளில் போர் நடைபெறுகிறது.லெப னான் மீது குண்டு மழை பொழி கிறது. ரஷியா-உக்ரைன் யுத்தம் ஆண்டுக் கணக்கில் நடைபெற்று வருகிறது. மனிதர்களையே அழித் தொழிக்கும் ஆயுதப் போரில் ஈடுப டுபவர்கள் படிக்காதவர்களா, கல் வித் தகுதி இல்லாதவர்களா, அப் படியானால் அறிவை வளர்ப்ப தற்கு உதவிய கல்வி மனிதர்களுக் குப் பண்பை வளர்த்திடப் பயன்ப டவில்லையா?
சக மனிதர்கள் மீது அன்பையும் சகோதரத்துவத்தையும் வளர்க்க அடித்தளமிடுவதே உண்மையான கல்வியாகும். கல்வி அறிவு பெற்ற அனைவரும் சமாதானத்தையே வலியுறுத்த வேண்டும். வன்முறையற்ற உலகையே மனிதர்களுக்கு கற்று தர வேண்டும். நல்லிணக்கத்தை சமாதானத்தை
சகவாழ்வை மனித நேயத்தை உழைப்பை உயர்வை ஒற்றுமையை கல்வி கற்று கற்று தருவதே கல்வியின் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும்.
உயர் கல்வியில் இந்திய அளவில் முதலிடத்தில் தமிழகம் உள்ளது. கல்வி நிலையங்களின் எண்ணிக் கையும், கற்போரின் எண்ணிக் கையும் பெரும் அளவில் வளர்ந் துள்ளது. இவற்றோடு தரமான கல்வியும், உயர்வான நோக்கங்க ளும், வளமான சிந்தனைகளை உள்ளடக்கிய பாடமுறைகளும் இணைக்கப்பட்டால் மட்டுமே சமூக முன்னேற்றத்துக்கு ஏற் புடையதாக அமையும். இவற் றோடு சிறந்த புத்தகங்களைத் தேடி வாசித்தல், பெற்றோரை மதித்தல், தாய்மொழியைப் போற்றுதல் தாய் நாட்டை நேசித்தால் போன்ற நற்சிந்தனையுடன் வளர மாணவிகளின் தன்னார்வமும் முன் முயற்சியும் இணைதல் அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்
நிகழ்ச்சியில் முதலியார் கல்விஅறக்கட்டளை பொருளாளர் டாக்டர் விஜயகுமார் கல்லூரி முதல்வர் .பழனியப்பன் அறக் கட்டளை நிர்வாகிகள் அருண் குமார்,யு.என்.முருகேசன், மாணிக்கம், ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், துணை முதல்வர் நிர்மலாதேவி, கல்லூரி பேரவை துணைத் தலைவர் பேரா சிரியர் சரண்யா உள்பட பலர் பங்கேற்றனர்.