நாகர்கோவில் மே 30
கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கா செந்தில்குமார் நேற்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அஞ்சல் துறை சார்பில் பார்சல் அனுப்பும் வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து
வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி கோட்டத்தின் கீழ் உள்ள அனைத்து கிளை அஞ்சலகங்களிலும் பொதுமக்களுக்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான பார்சல் சேவையை வழங்க பார்சல் அனுப்பும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 10 கிலோ வரையிலான பார்சல்களை கிளை அஞ்சலகங்கள் வழியாக அனுப்ப முடியும். மேலும் 20 கிலோ வரையிலான பார்சல்களை துணை மற்றும் தலைமை அஞ்சலகங்கள் வழியாக அனுப்ப முடியும். பார்சல் அனுப்புவதற்கான கட்டண விபரம் : 500 கிராம்கள் வரை; 36/- + GST, ஒவ்வொரு கூடுதல் 500 கிராம் அல்லது அதன் பகுதிக்கு; 16/- + GST.
விரைவு பார்சல் (EMS) சேவை மூலமாக 35 கிலோ வரையிலான பொருட்களை பாதுகாப்பாக மற்றும் விரைவாக எந்த இடத்திற்கும் அனுப்ப முடியும். இச்சேவையில் சிறப்பு கட்டண சலுகை, கிரெடிட் மற்றும் முன் வைப்பு வசதி என பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.
சிறியது முதல் பெரிய அளவிலான பொருட்களை பேக்கிங் செய்து (அதிகபட்சமாக 35 கிலோ வரை) அனுப்பும் வசதிகள்
நாகர்கோவில் மற்றும் தக்கலை
தலைமை அஞ்சலகங்கள், கன்னியாகுமரி, நெய்யூர், கொளச்சல், அருமனை, மார்த்தாண்டம், குழித்துறை
அஞ்சலகங்களில் உள்ளன.
மேலும் கீழ்க்கண்ட பொருட்களை, அஞ்சல் துறையின் மேம்படுத்தப்பட்ட பார்சல் சேவைகள் மூலம் சிறப்பு பேக்கிங் செய்து பாதுகாப்பாக அனுப்ப முடியும் அவைகள்:
நூல்தொழில் மற்றும் துணி பொருட்கள் (சேலைகள், உடைகள், பருத்தி துணிகள், தயாரிக்கப்பட்ட ஆடைகள்),
மருத்துவ தயாரிப்புகள் (ஆயுர்வேதம் உள்ளிட்டவை),
மின்னணு பொருட்கள் மற்றும் கருவிகள் (கைபேசி உபகரணங்கள், சில்லறை மின்னணு பொருட்கள்),
கைவினைப் பொருட்கள் மற்றும் அழகு சாதனங்கள்,
உணவுப் பொருட்கள் (பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள், கைருசி தயாரிப்புகள்) ஆகும்.
அதிக எண்ணிக்கையில் பார்சல்கள் அனுப்ப விரும்பும் வணிக நிறுவனங்கள், ஹோம்மேட் தயாரிப்பாளர்கள், ஆன்லைன் விற்பனையாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் அஞ்சல் துறையுடன் தொடர்பு கொண்டு தங்களுக்கேற்ற சிறப்பு கட்டண சலுகைகளோடு கூடிய சிறப்பு பார்சல் சேவைகளை ஒப்பந்த முறையில் பெறலாம்.
இந்த சேவையின் மூலம், பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், பல்வேறு தொழில் செய்பவர்கள், இதர வாடிக்கையாளர்கள் என அனைவரும் தங்களின் பொருட்களை பாதுகாப்பாகவும், குறைந்த செலவிலும் அனுப்ப முடியும்.
மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களில்
வணிகத் தொடர்புகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண் 9894774410 / 9080820107 ஆகும் இதில் தொடர்பு கொண்டு பயனாளிகள் பார்சல் சம்பந்தமான சந்தேகங்களை தீர்த்து பயன் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.