பரமக்குடி,மே.22: பரமக்குடி அரசு மகளிர் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் வனஜா தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு உயர்கல்வி துறையின் சார்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பரமக்குடி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பாடத்திற்கான இணையதள சேர்க்கை விண்ணப்பம் செய்வதற்கு சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் ரூ.50 ,தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் ரூ 2 செலுத்தி விண்ணப்பிக்கலாம். மகளிர் கல்லூரியில் பி ஏ (தமிழ்) பி ஏ (ஆங்கிலம்)
பிகாம்( சிஏ),
பி ஏ(பொருளாதாரம் ) பிஎஸ்சி கணினி அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். மே மாதம் 27ஆம் தேதி கடைசி நாள் என்பதால், பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தினை www.tngsa.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். என கல்லூரியின் முதல்வர் வனஜா தெரிவித்துள்ளார்.