மதுரை டிசம்பர் 26,
மதுரை, வணிகவரி மற்றும் பதிவுத் துறையில் பணிபுரிய, விளையாட்டில் 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமன ஆணைகள் பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தலைமைச் செயலகத்தில்
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து, வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வின் போது, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் பிரஜேந்திர நவ்நீத், வணிகவரித்துறை ஆணையர் முனைவர் டி. ஜகந்நாதன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்