புதுக்கடை, மே. 31-
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பகல்ஹாம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா ஆபரேஷன் சிந்துர் மூலம் பாகிஸ்தான் உள்ள ஒன்பது தீவிரவாத முகாம்களை அழித்தது. இந்த வெற்றியை பா.ஜ.க சார்பில் இந்திய அளவில் தேசியக் கொடியை கையில் ஏந்தி வெற்றி விழாவாக கொண்டாடப்பட்டது.
அதன்படி முஞ்சிறை கிழக்கு ஒன்றிய பா.ஜ.க சார்பில் முஞ்சிறை சந்திப்பில் இருந்து ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பேரணி நடந்தது. இந்த பேரணியை குமரி மேற்கு பாரதிய ஜனதா பொதுச் செயலாளர் சுடர் சிங் துவக்கி வைத்தார். குமரி மாவட்ட பா.ஜ முன்னாள் தலைவர் தர்ம ராஜ், குமரி மேற்கு மாவட்ட பா.ஜ துணைத் தலைவர் சந்திரகுமார், முஞ்சிறை கிழக்கு ஒன்றிய பா.ஜ தலைவர் குமார் ,முன்னாள் முஞ்சிறை ஒன்றிய பெருந்தலைவர் ராஜேஸ்வரி, .கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் தலைவர் குமரேசதாஸ், செயலாளர் ராஜகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேரணி புதுக்கடை சந்திப்பில் நிறைவடைந்தது.