மதுரை ஜூன் 28,
மதுரையில் ஆறாவது படை முருகன் கோவில் உண்டியல் திறப்பு
மதுரை மாவட்டம், அழகர் கோவில் மலையில் உள்ளது. பிரசித்தி பெற்ற முருகப்பெருமானின் ஆறாவது படை வீடு சோலை மலை முருகன் கோவில் ஆகும். இங்குள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ 30 லட்சத்து 92 ஆயிரத்து 744 ம், தங்கம் 31 கிராமும், வெள்ளி இனங்கள் 1408 கிராமும், வெளிநாட்டு டாலர் நோட்டுகளும், இருந்தது. உண்டியல்கள் திறப்பின் போது அறநிலைய துறை துணை ஆணையர்கள் கலைவாணன், சுவாமிநாதன், அறங்காவலர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், குழு தலைவர் பிரதிநிதி நல்லதம்பி, ஆய்வாளர் சாவித்திரி, மேலாளர் தேவராஜ், பேஷ்கார் ராஜா, மற்றும் கோவில் பணியாளர்கள், மகளிர் குழுவினர், வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்