கோவை ஜூலை:12
கோவை மாவட்டம் தங்க நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் கால் பதித்து தனது வர்த்தகத்தை விரிவாக்கி கொண்டுள்ள மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு& டைமண்ட்ஸ் நிறுவனம் தனது மூன்றாவது புதிய ஷோரூமை ஆர் எஸ் புரம் பகுதியில் திறந்துள்ளது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜுனன் கலந்துகொண்டு துவக்கிவைத்து முதல் விற்பனையை தொடங்கிவைத்தார்.இதுகுறித்து நிர்வாகம் சார்பில் கூறியதாவது மலபார் கோல்டு டைமண்ட்ஸ் தற்போது 13 நாடுகளில் 350 க்கு மேற்பட்ட சில்லரை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
சென்னை கோவை மதுரை நாகர்கோவில் திருநெல்வேலி சேலம் ஈரோடு உட்பட 28 கிளைகளை கொண்டுள்ளது.
விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகைத் தொகுப்பான “பிரீசியா” நகைகள் கைவினை கலைஞர்களால் செய்யப்பட்ட எத்தினிக் பாரம்பரிய இந்திய நகை வடிவமைப்புகளில் உருவான டிவைன் இந்த ஷோரூமில் இடம் பெற்றுள்ளன என்று தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில்
தமிழ்நாடுவேளாண் பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் ஆர் தமிழ் வேந்தன் நேரு கல்வி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி பி கிருஷ்ணகுமார் கோல்டன் டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டல தலைவர் யாசர மலபார் கோல்டு தமிழ்நாடு மண்டல வணிக தலைவர் சபீர் அலி தமிழ்நாடு மேற்கு மண்டல தலைவர் நௌசாத் ஆர் எஸ் புரம் கிளை தலைவர் அனீஸ் ரகுமான் மற்றும் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் மேலாண்மை உறுப்பினர்கள் மற்றும் கிளை ஊழியர்கள் ஆகிய கலந்து கொண்டனர்.