திருப்பத்தூர்:பிப்:02
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பேரூராட்சி பேருந்து நிலைய வணிக வளாகத்தில் புதிதாக உதயமாகியுள்ள ரைஸிங் சன் ஆப்டிக்கல்ஸ் எனும் கண் கண்ணாடிக்கடையை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரும் சிவகங்கை திமுக மாவட்டக்கழக செயலாளருமான கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேரூர்க்கழக செயலாளர் கார்த்திகேயன், சேர்மன் கோகிலாராணி நாராயணன், துணைத்தலைவர் கான் முகமது, மாவட்ட ஐடி விங் துணை அமைப்பாளர் மெ. காளிமுத்து, மாவட்ட பிரதிநிதி ஏடிஎன்ஆர்.தங்கமணி,மெர்க்குரி தனபால் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய பேரூர்க்கழக நிர்வாகிகள் மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகள் உறவினர்கள் ஏரளமானோர் கலந்து கொண்டனர்.