நீலகிரி. ஏப்ரல். 04.
நீண்ட நாட்களாக ஊட்டி தாலுக்கா கே.கே நகர், எம் பாலடா போன்ற பகுதிகளில் குறைவான மின்னழுத்தம் ஏற்பட்டதால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்த நிலையில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு படிப்பதற்கு மற்றும் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்படைந்த நிலையில் நீலகிரி மாவட்ட சர்வதேச உரிமைகள் கழகம் எடுத்த பெரும் முயற்சியால் பகுதி கிராமங்களுக்கு உயரழுத்த மின் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. மேலும் இப்பகுதியில்
குடி தண்ணீர் பிரச்சனையும் நிலவிவந்த்து. இந் நிலையில் சர்வதேச உரிமைகள் கழகத்தின் நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் நஞ்சநாடு ஊராட்சி முன்னாள் தலைவருமான
கே குப்புசாமி அவர்களின் பெரும் முயற்சியால் 26 3/2025 அன்று நீலகிரி மாவட்ட மேற்பார்வை பொறியாளர்
சிவகுமார் தலைமையில் புதிய டிரான்ஸ்பார்மர் /துவக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாக சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்து பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாலடா, கே .கே. நகர் பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து தந்த சர்வதேச உரிமைகள் கழகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களையும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது. சர்வதேச உரிமைகள் கழகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகிரி மாவட்ட சர்வதேச உரிமைகள் கழகத்தின் சார்பாக பாராட்டுகளையும் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை நீலகிரிமாவட்ட தலைவர் எஸ் குமார் அவர்கள் தெரிவித்தார். மாவட்ட துணைச் செயலாளர்
ஆரோக்கியம் நாதன் , மணி, மற்றும்
ரஜினி பிரபாகர் ஆகியோர் பாராட்டு நிகழ்வில் கலந்துகொண்டனர். மேலும் அப்பகுதி கிராம்பொதுமக்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.



