கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த மாரம்பட்டி இணைப்பு சாலை அருகே செங்கம் பகுதி மேல் இராவந்த வாடி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் (வயது 27) த/பெ மாசிலாமணி என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். முன்னாள் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியை முந்த முயற்சித்த போது டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலி. லாரியை ஓட்டி வந்த வெங்கடேசன் என்பவர் தலைமறைவு ஆகியுள்ளார். லாரியை பறிமுதல் செய்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



