தேனி அக் 07:
தேனி அருகே தனியார் பஸ் தீப்பிடித்து சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி தேனி அருகே உள்ள உப்புக்கோட்டை விலக்கு அருகே கம்பத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற தனியார் பேருந்தில் சிக்கி இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார் தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து மதுரை நோக்கி வேல்முருகன் என்ற தனியார் பஸ் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது அப்போது தேனி போஸ்ட் ஆபீஸ் சந்து பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்த சீனி தேவர் மகன் அரசாங்கம் வயசு 55 இருசக்கர வாகனத்தில் உப்பு கோட்டை விலக்கு அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக அதி வேகமாக வந்த தனியார் பஸ் முன் டயரில் சிக்கி அந்த இடத்தில் இருந்து 40 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு தலை நசுங்கி உயிரிழந்தார் இருசக்கர வாகனம் பஸ்சுக்கு முன் டயரில் சிக்கியதையடுத்து இரு சக்கர வாகனம் மள மள என்று தீப்பிடித்ததில் வேல்முருகன் பஸ்ஸும் தீப்பிடித்து மள மளவென தீப்பிடித்து எறிந்தது இதை அடுத்து பஸ்ஸில் பயணித்த அனைவரும் பின்படிக்கட் டு வழியாக அனைவரும் இறங்கிச் சென்றனர் மேலும் பஸ் டிரைவர் கண்டக்டர் உள்பட பஸ்ஸில் பயணித்தவர்களுக்கு எந்த ஒரு காயமும் இல்லாமல் தப்பித்தார்கள் இந்த விபத்துக்கு காரணம் முழுக்க முழுக்க தனியார் பேருந்து அதிக வேகத்தில் வந்ததால் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது இது குறித்து இறந்த அரசகுமாரின் மனைவி ராதா வயசு 42 அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் தலைமை காவலர் ராஜமோகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் மேலும் இது குறித்த புகாரின் பேரில் தேனி தீயணைப்பு துறை அதிகாரிகள் வந்து பஸ்ஸில் மள மளவென எரிந்து கொண்டிருந்த தீயை தீயை அணித்தனர். பஸ்ஸில் ஏற்பட்ட தீயில் பெட்ரோல் டேங்க் வெடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது