சென்னை மேடவாக்கத்தில்
அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமியின். ஆணைக்கிணங்க தமிழக அரசால் உயர்த்தப்பட்ட சொத்து வரி வீட்டு வரி மின்சார வரி பால் விலை உயர்வு மளிகை பொருட்கள் விலை உயர்வுகளை திரும்ப பெற வலியுறுத்தியும் போதைப் பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும் மேடவாக்கம் மெயின் ரோட்டில் சென்னை புறநகர் மாவட்டம் பரங்கிமலை கிழக்கு ஒன்றியம் சார்பில் இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர்
எம்.ஜி. சக்திவேல் தலைமையில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுகவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.