மதுரை ஜனவரி 18,
எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய அதிமுக எம்எல்ஏ
மதுரை திருப்பரங்குன்றம் 16வது மண்டபம் அருகே எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் படத்திற்கு அதிமுக திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்போது ஜல்லிக்கட்டில் உயிரிழக்கும் வீரர்களுக்கு குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய் நிச்சயமாக நிதியுதவி வழங்கப்படும் என்று கூறினார். இந்த நிகழ்வில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அன்னதானம் வழங்கும் நிகழ்வை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.