தென்காசி மாவட்டத்தில் அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர்நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியினை தென்காசி ஐ.டி. குத்துக்கல்வலசையில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீ குமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
17 முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ தூரமும், 17 முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு 5 கி.மீ தூரமும், 25 வயதிற்கு மேற்ப்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ தூரமும், 25 வயதிற்கு மேற்ப்பட்ட பெண்களுக்கு 5 கி.மீ தூரமும் நடைபெற்றது. இப்போட்டியில் சுமார் 250க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் வெற்றிபெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000மும். இரண்டாவது பரிசாக ரூ.3000மும். மூன்றாம் பரிசாக ரூ. 2000 மும், நான்காம் பரிசு முதல் பத்தாம் பரிசு வரை ரூ.1000 ம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தெரிவித்தார்.
பின்னர் காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையேற்று பரிசுகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர்நலன் அலுவலர் ராஜேஷ் மற்றும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.