ஈரோடு ஜூலை 20
விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில்
தியாகி பொல்லான் நினைவு நாளை யொட்டி ஜெயராமபுரத்தில் உள்ள அவரது படத்துக்கு ஈரோடு தெற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் கலைச்செல்வி தலைமையில் தலைவர் தமிழின்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மாநகர தலைவர் நடராசு பொருளாளர் மயில்சாமி மண்டல தலைவர்கள் லோகநாதன் அங்கப்பன் மகளிரணி செயலாளர் பேபி நாமக்கல் மாவட்ட மகளிரணி செயலர் பழனியம்மாள் மற்றும் அலமேலு திருப்பூர் மாவட்ட நிர்வாகி சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்
இதன் பிறகு விடுதலை வேங்கைகள் கட்சியின் தலைவர் தமிழின்பன் கூறும்போது பொல்லான் வரலாற்றை பாட புத்தகத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாவீரன் பொல்லான் மாளிகை என பெயர் சூட்டிட வேண்டும் பொல்லான் வாரிசுதாரர்களுக்கு உரிய சான்றிதழ், ஓய்வூதியம்,விவசாய நிலம்,மற்றும் வீடு உள்ளிட்ட அனைத்து பயன்பாடுகளையும் வழங்கிட வேண்டும் அருந்ததியர்களுக்கு ஆறு சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்று கூறினார்.