களியக்காவிளை, ஜூன், 2 –
செங்கல் சிவபார்வதி கோயில் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட் புக்குகள் வழங்கப்பட்டது.
களியக்காவினை அருகே உதியன் குளம் கரை செங்கல் ஊராட்சிக்குட்பட்ட மகேஸ்வரத்தில் சிவ பார்வதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் உலகில் மிக உயரமான சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் அறக்கட்டளை சார்பில் கடந்த 27- வருடங்களாக பள்ளி செல்லும் ஏழை மாணவர்களுக்கு பேக், குடை, நோட் புக், எழுது கோல் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றனர். இந்த வருடம் கேரளா, தமிழக பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. ஆகவே ஏழை மாணவ மாணவிகளுக்கு நோட்புக் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கோயில் மடாதிபதி சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி திருவிளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கோயில் மேல்சாந்தி குமார் முன்னிலை வகித்தார். மதுரை சுப்பராமன் மாணவர்கள் நல்ல முறையில கல்வி கற்று உயர்ந்த பதவியினை அடைய வேண்டும் என பேசினார்.2025 – 2026 கல்வியாண்டை முன்னிட்டு சுமார் ஆயிரம் மாணவர்களுக்கு நோட்புக், குடை, பேக், வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.