கிருஷ்ணகிரி ஏப் 23
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்து பாவக்கல் அருகே நல்லவன்பட்டியில் சுமார் நூறு ஆண்டுகளாக இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் (மையானம்) சுடுகாட்டு இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இன்று அதே கிராமத்தை சேர்ந்த ரரேஷ் என்பவரின் தந்தை பலராமன் என்பவர் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.
அவரது உடலை அடக்கம் செய்யம்போது அதே ஊரைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் இது எங்களுடைய இடம் விடமுடியாது என்று சுடுகாட்டு இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அப்பகுதி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், மண்டல துணை வட்டாட்சியர் காவல்துறையினர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி இறந்தவரின் உடலை அடக்கம் செய்தனர்.