தென்காசி மே 13
வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற சொல் வழக்கு இன்று தமிழகத்தில் உண்மையை நிரூபித்திருக்கிறது.
கடந்த காலங்களில் ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையில் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் வடமாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கி வந்த நிலையில் தென் மாநிலங்கள் யாவும் மத்திய ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்ட வந்தது அந்த வகையில் தற்போது இருக்கின்ற மத்திய அரசும் சரி மாநில அரசுகளும் சரி குறிப்பாக மதுரைக்கு தெற்கே உள்ள தென் தமிழகத்தில் தென்காசி விருதுநகர் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களின் வளர்ச்சி திட்டம் வழங்குவதில் புறக்கணித்து வருகிறது.
மத்திய அரசு தனது பங்கிற்கு தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பல்வேறு திட்டங்களை தந்தாலும் தென் தமிழக மக்கள் குறிப்பாக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பிற்காக தென் மாவட்டங்களில் எந்தவித தொழிற்சாலையோ?வேளாண் சார்ந்த நிறுவனங்களோ? ரயில்வே இருப்புப் பாதைகளின் விரிவாக்கங்களோ? நிரந்தர ரயில் மார்க்க திட்டங்களோ? வேளாண் சார்ந்த உற்பத்தியை மேம்படுத்த எவ்வித நடவடிக்கைகளோ? இல்லாத சூழலில் இப்பகுதிகளுக்கென எவ்வித திட்டங்களும் மேற்கொள்ளாத நிலையில் சுதந்திரம் அடைந்து இந்த 75 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் புறக்கணிக்கப்பட்டு வருவது தான் வேதனையிலும் வேதனை.
அரசியல் கட்சிகள் சார்பில் இந்த மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்ற சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் குரல் மேற்கண்ட மக்கள் மன்ற சபைகளில் ஒலிக்கவில்லை மாறாக ஒவ்வொரு தேர்தல் காலகட்டத்திலும் வாக்கு வங்கிகள் மனதில் வைத்து கணக்கில் கொண்டு வாக்குகளின் எண்ணிக்கையை அதிகமாகக் கொண்ட சமூகத் தலைவர்களை சந்தித்து அவர்கள் வழிபடுகின்ற வழிபாட்டுத் தலங்களுக்கு அன்பளிப்புகளை நிதியாகவும் பொருளாகவும் வழங்குவது இளைஞர்களின் வேலைக்காக தொழிற்சாலைகளை ஏற்படுத்த முன்வராக இந்த மக்கள் பிரதிநிதிகள் இளைஞர்களுக்கு போதை வஸ்துகளையும் அசைவ விருந்துகளையும் வழங்கி ஊக்குவித்து வருகிறது.
குறிப்பாக தென் தமிழகத்தில் கைத்தறி விவசாயம் மற்றும் சிறு குறு கைத்தொழில் எல்லாம் மத்திய மாநில அரசுகளால் ஊக்குவிக்கப்படாமல் மிகவும் நலிவடைந்த நிலையில் குறிப்பாக கைத்தறி வேளாண் தொழில்கள் எல்லாம் அடியோடு அழிந்து வருவது மிகவும் கவலை அளித்து வருகிறது இது குறித்து சிந்தனை செய்து கோரிக்கை எழுப்பி ஜனநாயக அரசுகளுக்கு அழுத்தம் தர வேண்டிய பல அரசியல் கட்சிகளும் பொதுநல அமைப்புகளும் பெயரளவிற்கு செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் விளம்பரத்திற்காக புகைப்படம் எடுத்து அறிக்கை விடுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர் நாட்டு மக்களின் நலனுக்காகவோ? தேச நலனுக்காகவோ?எந்த மக்கள் பிரதிதியும் ஆளுமை அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்க முன் வருவதில்லை.
ஒவ்வொரு துறை சார்ந்த அமைச்சர்களும் தங்கள் இலாக்காக்கள் மூலம் எவ்வளவு நாட்டிற்கு வரும் வருமானத்தை இழப்பீடு செய்து கபளீ கரம் செய்ய வேண்டுமோ? அத்தனை நிலைகளிலும் மிகத் துடிப்புடனும் கவனத்துடனும் செயல்பட்டு வருகின்றனர் ஊழல் ஒன்றையே கடமையா கொண்டுள்ள இது போன்ற அரசியல்வாதியின் செயல்பாடுகளை கண்காணித்து வரும் மக்களோ வாக்கு செலுத்தும் காலகட்டத்தில் தன்னுடைய சிந்தனையை அடகு வைத்து செலவுக்கு தரும் பணங்களைப் பெற்றுக் கொண்டு மீண்டும் ஊழல்வாதிகளையே ஆட்சி கட்டிலில் அமர்த்தி வருகின்றனர்
சந்தி சிரிக்கும் சட்டம் ஒழங்கும் தென் மாவட்டங்களில் தறி கெட்டு தலைவிரித்து ஆடுகிறது மீண்டும் கொலை வெறி தாக்குதல்கள் சாதிய மோதல்கள் பாலியல் துன்புறுத்தல்கள் என பல்வேறு வகைகளிலும் அனுதினமும் குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன கொலைகளில் ஒரு சில வழக்குகளை மட்டும் கவனம் செலுத்துகின்ற காவல்துறை பெரிய குற்ற செயல்களை கண்டுபிடிக்காமல் அரசியல் அழுத்தம் காரணமாக தெரிந்தும் தெரியாதபோல் இருந்து கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
மொத்தத்தில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் வளர்ச்சி திட்டங்களிலும் சரி ஏனைய கல்வி பொருளாதாரம் மேன்மையிலும் சரி வேளாண் உற்பத்தியிலும் சரி மிகவும் பின்தங்கிய நிலையிலே உள்ளது என்பதை நினைக்கின்ற போது எதிர்கால இளைஞர்கள் எப்படி வாழப் போகிறார்கள் என்ற கவலை ஒவ்வொரு குடும்பப் பெற்றோர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
எனவே மத்தியில் ஆளுகின்ற அரசும் சரி மாநில ஆளுகின்ற அரசும் சரி தென் மாவட்ட மக்களின் நலன் கருதி அவர்களுடைய கல்வி வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் முடங்கி கிடக்கும் தொழில்களை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு முனைப்பான திட்டங்களை செயல்படுத்திட வேண்டும் என ஒட்டுமொத்த தென் மாவட்ட மக்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் சொல்லும்படியான எந்த தொழிற்சாலைகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது…