அதனைத்தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் இன்று குத்துவிளக்கு ஏற்றி வைத்து, பார்வையிட்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, காணொளிக் காட்சி வாயிலாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பாக, நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.20 கோடியே 31 இலட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள 104 வகுப்பறைகள் மற்றும் 1 ஆய்வகத்தை திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.4 கோடியே 65 இலட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 22 வகுப்பறைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் .தே.மதியழகன் அவர்கள் முன்னிலையில் குத்து விளக்கு ஏற்றி வைத்து, வகுப்பறைகளை பார்வையிட்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்
தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு பள்ளி
மாணவ, மாணவியர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முதலமைச்சரின் காலை உணவு
திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டத்தின் கீழ்
உயர்வுக்கு படி, இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை
செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவ, மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப
கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,
பள்ளிக்கல்வித்துறை சார்பாக, கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட
மோரனப்பள்ளி, கிருஷ்ணகிரி நகராட்சி, பர்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மல்லப்பாடி,
வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குருபரப்பள்ளி, சூளகிரி ஊராட்சி
ஒன்றியத்திற்குட்பட்ட அட்டக்குறுக்கி, காட்டிநாயக்கனத்தொட்டி, ஏனுசோனை, தளிஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெத்தபேளகொண்டப்பள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மிட்டப்பள்ளி, சிங்காரப்பேட்டை, மத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குன்னத்தூர், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாகரசம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.20 கோடியே 31 இலட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் 104 வகுப்பறைகள் மற்றும் 1 ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.4 கோடியே 65 இலட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் 22 வகுப்பறைகள் மாணவிகளின் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்தார்.
மேலும், தளி ஊராட்சி ஒன்றியம், பெத்தபேளகொண்டப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில், நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.2 கோடியே 75 இலட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள 13 வகுப்பறைகளை ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் .ஒய்.பிரகாஷ் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, வகுப்பறைகளை பார்வையிட்டார்.
மேலும், பர்கூர், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டிணம், ஊத்தங்கரை, மத்தூர், சூளகிரி மற்றும் தளி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள், ஆசிரிய பெருமக்கள் ஆகியோர் மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சிகளில், பொதுப்பணித்துறை (கட்டிடம்) செயற்பொறியாளர் .சுவாமிநாதன், கிருஷ்ணகிரி நகரமன்ற தலைவர் .பரிதா நவாப், துணைத்தலைவர் .சாவித்திரி கடலரசுமூர்த்தி, தளி ஒன்றிய குழு தலைவர் .சீனிவாசலுரெட்டி, வட்டாட்சியர் .வளர்மதி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு.நவாப், பள்ளி தலைமையாசிரியர் .மகேந்திரன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரிய பெருமக்கள், பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர்.