மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மத்திய ஒன்றியம் ஆனந்த தண்டபுரம் ஊராட்சியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சம் மதிப்பெட்டில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் மயிலாடுதுறை மத்திய ஒன்றிய செயலாளர் ஞான. இமயநாதன் தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிவதாஸ் மத்திய ஒன்றிய நிர்வாகிகள்,உள்ளிட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.