அகஸ்தீஸ்வரம் நவ 10
குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக அகஸ்தீஸ்வரம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் விஜய்வசந்த் எம். பி யிடம் கோரிக்கை வைத்தனர், கோரிக்கையை ஏற்று தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 14.50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து அதற்கான பணி நேற்று தொடங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி. உதயம், நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார்,
அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவி அன்பரசி, வட்டார தலைவர் டேனியல், வர்த்தக காங்கிரஸ் கிங்ஸிலி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆரோக்கியராஜன், விஜயன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, உட்பட பலர் கலந்து கொண்டனர்