தென்தாமரைகுளம்., பிப். 27.இந்திய அரசின் சமூக நலன் மற்றும் விளையாட்டுத் துறை மண்டல இயக்குனரகம், சென்னை , மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி நடத்தும் ஏழு நாட்கள் தேசிய முகாம் 22 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க விழா 23 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற்றது. தேசிய ஒருமைப்பாட்டு முகாமின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெயக்குமாரி வரவேற்புரை ஆற்றினார். விழாவினை விவேகானந்தா கல்விக் கழகத் தலைவர் ஜி. என். பாலமுருகன் திருவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயந்தி தலைமையுரையாற்றினார். கல்லூரிச் செயலாளர் சி. ராஜன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வழக்கறிஞர் ரெ.மகேஷ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் .சென்னை நாட்டு நலப் பணித்திட்ட மண்டல இயக்குநர் முனைவர் சாமுவேல் செல்லையா தொடக்க உரையாற்றினார். முகாமில் நோக்கம் குறித்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெளியப்பன் மற்றும் மேனாள்நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலிங்கம் கருத்துரை வழங்கினர். தமிழ்நாடு நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி முனைவர் குணாநிதி சிறப்புரையாற்றினார். நாட்டு நல பணித்திட்ட அலுவலர் முனைவர் சிவபாலன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சிகளை நிறைவேறு திருநாவுக்கரசு தொகுத்து வழங்கினார். விழாவில் முனைவர் கோசலை, முனைவர் பிரபாவதி, முனைவர் செல்வகுமார், முனைவர்.ஆதிநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு முகாமில் கன்னியாகுமரி திருவள்ளுவர் பாறை மற்றும் விவேகானந்தர் பாறை, வட்டகோட்டை,திற்பரப்பு,, பத்மநாபபுரம் அரண்மனை முதலிய இடங்களை மாணவர்கள் பார்வையிட இருக்கின்றார்கள் . இந்தியாவின் பல்வேறு மாநிலங்களான கர்நாடகா , ஆந்திர பிரதேசம் மகாராஷ்டிரா, கேரளா , ஹரியானா குஜராத் ,ராஜஸ்தான் அசாம், ஒடிசா,தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் இருந்து 200 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியை குமரி மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு முகாமின் ஒருங்கிணைப்பாளருமாகிய முனைவர் எஸ்.ஜெயக்குமாரி , கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயந்தி மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முகாம் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.



