தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் (ரேரா) நிலவி வந்த பல்வேறு பிரச்சனைகள் சம்பந்தமாக தமிழ்நாடு ரேரா ஆணைத்தின் தலைவர் சிவ்தாஸ் மீனா அவர்களை அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி மற்றும் நிர்வாகிகள் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் நிலவுகின்ற பிரச்சினைகள், சட்டசிக்கல்கள், வீட்டுமனை பிரிவு, அடுக்குமாடி குடியிருப்பு. வணிகவளாகங்கள் மற்றும் மனை வரன்முறை சட்டத்தின் கீழ் அனுமதி பெற்ற வீட்டுமனை பிரிவு திட்டங்களை பதிவு செய்வதில் ஏற்பட்ட கால தாமதங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.