திண்டுக்கல்
மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பணிகளும், தொழிலாளர் நலன் மற்றும் ஆலோசனைகள், அரசு துறைகளுடன் இணைந்து குழந்தைகள் உரிமைகள், குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தல், அரசு குறித்த விழிப்புணர்வு,இளைஞர் தொழில், சமத்துவம் நல்லிணக்கம், சமுதாய வளர்ச்சிக்காக செயல்பட்டதற்கு அமைதி அறக்கட்டளையின் மேலாளரும், குழந்தைகள் மற்றும் பாதுகாப்பு குழு உறுப்பினரும்,
ஊழல் தடுப்பு மற்றும் விஜிலென்ஸ் கவுன்சில் மையம்-இந்தியாவின் உறுப்பினருமான சேவ ரத்னா டாக்டர் ஆ. சீனிவாசனுக்கு சர்வதேச சமூக ஆர்வலர்களும் கூட்டமைப்பு மற்றும் வெல்னஸ் அமைப்பின் சார்பில் தேசிய கல்வி நாள் முன்னிட்டு தேசிய இன்ஸ்பிரேஷன்
(உலகளாவிய கெளரவம் ) விருது தேர்வு. இவரை சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.