கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலைய வளாகத்தில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக, உலக நுகர்வோர் தினம் மற்றும் தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள்கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்ததாவது:
உலக நுகர்வோர் தினம் மற்றும் தேசிய நுகர்வோர் தினத்தையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நுகர்வோர் உரிமைகள் மற்றும் சட்டங்கள் பற்றி நுகர்வோர் சங்கங்கள், பள்ளி மாணவ மாணவியர்கள் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மக்களை கவரும் வகையில் வெளியிடப்படும் விளம்பரத்தை பார்த்து பொருட்களை வாங்குவதை விட அந்த பொருட்களில் உள்ள கலவைகள் குறித்தும் அதை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றி அறிந்து கொண்டபிறகு பயன்படுத்த வேண்டும்.
பொருட்களை வாங்கி பயன்படுத்தும் போது கலவைகள் குறித்த விவரங்களையும் அதிக பட்ச விலைகளையும், தயாரிப்பு நாள் மற்றும் காலவதியாகும் நாட்களை பார்த்து வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கும் பொருட்களுக்கு ரசீது கேட்டு வாங்க வேண்டும். அப்பொழுது தான் அப்பொருளில் குறைபாடு இருந்தால் நுகர்வோர் உரிமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள முடியும். எந்தபொருளில் எதை கலப்படம் செய்வார்கள், எடை அளவுகளில் எவ்வாறு தவறு செய்வார்கள் என்பது குறித்து தெரிந்துக்கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு . அவர்கள் தெரிவித்தார்.
விழிப்புணர்வு பேரணியானது கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் துவங்கி, பெங்களூர் சாலை, ராயக்கோட்டை சாலை வழியாக அரசு மகளிர் கலைக்கல்லுாரி வளாகத்தில் நிறைவடைந்தது.
இப்பேரணியில் மாவட்ட வழங்கல் அலுவலர் .கீதாராணி, 250 மாணவ மாணவியர்கள், நுகர்வோர் பாதுகாப்பு சங்க பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.