நாகர்கோவில்-மே22-
குட்கா புகையிலை கட்டுப்படுத்த போலீசார் மற்றும் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் நகர பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் பெட்டிக்கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் மாநகராட்சி நகர்நல அதிகாரி ஆல்பர்ட் மதியரசு தலைமையிலான குழுவினர் வடசேரி கனகமூலம் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள கடை ஒன்றில் 25 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குட்கா புகையிலை பறிமுதல் செய்யப்பட்ட கடைக்காரர் மீது நடவடிக்கை எடுப்பது டன் அந்த கடைக்கு அபராதம் விதித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.