வேலூர்_22
என் கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் வேலூர் கோட்டாட்சியர் பங்கேற்று தொடங்கி வைத்தார். வேலூர் லட்சுமி கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் என் கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா தொடங்கி வைத்து உரையாற்றினார். இதில் வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராமச்சந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



