களியக்காவிளை நாஞ்சில் கலை, அறிவியல் கல்லூரியில் இசை சிகிச்சை குறித்த கருத்தரங்கம் தென் தாமரை குளம்., மார்ச். 17.கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை , நாஞ்சில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சமூகப்பணித்துறை சார்பில் “இசை சிகிச்சையின் மூலம் உடலுக்கும் மனதுக்கும் நலம் பெறுவதற்கான உத்திகள்” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி லினி மற்றும் குழுவினரின் பிரார்த்தனை பாடலுடன் தொடங்கியது. இரண்டாமாண்டு மாணவி சித்தாரா ரவீந்திரன் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் அருட்தந்தை டாக்டர். சி. ஸ்டீபன் தலைமை உரையாற்றி, இசை சிகிச்சையின் முக்கியத்துவத்தை விளக்கினார். தொடர்ந்து, முதல்வர் டாக்டர். எம். அமலநாதன் சிறப்பு வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக வந்த மனநல ஆலோசகர் டாக்டர். ஆர். கே. ஸ்ரீஜித். இசை சிகிச்சை மூலம் உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் உத்திகளை விளக்கினார். நிகழ்ச்சி நிறைவில் முதலாமாண்டு மாணவி எஸ். ஆர்.ஆஞ்சலோ நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், பேராசிரியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும், நிகழ்ச்சியை சமூகப்பணித்துறை தலைவி மேரி பெல்சிட், உதவிப்பேராசிரியர் தீபன் ராஜ் மற்றும் மாணவர்கள் ஒருங்கிணைத்திருந்தனர்.