தக்கலை, பிப்-7
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பிரம்மபுரம் பகுதியை சேர்ந்தவர் முகேஷ் குமார் (37). வேன் டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி ஆஷா தேவி (34) என்ற மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர். கடந்த மூன்றாம் தேதி பொருட்கள் வாங்குவதற்காக முகேஷ் குமார் பைக்கில் குமாரகோவில் பகுதிக்கு சென்றார். பின்னர் பொருட்களை வாங்கி விட்டு வீட்டிற்கு செல்லும்போது நாய் ஒன்று குறக்கே பாய்ந்தது.
இதனால் பைக்கில் இருந்து முகேஷ் குமார் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வரை தக்கலை தீவணைப்பு படையினர் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று 6-ம் தேதி காலை முகேஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.