ஏப்ரல்:18
திருப்பூர் மாநகர் பிச்சம்பாளையம் புதூர் அருகே உள்ள துரைசாமிபுரம் பகுதியில் இயங்கி வரும் நியாய விலை கடையில் சுமார் 830 கார்டுகள் உள்ளது.இந்த கடையில் இன்று பொருட்கள் வாங்க பொதுமக்கள் வந்திருந்த பொழுது பதிவு செய்யும் இயந்திரம் கோளாறு ஏற்பட்டது இதன் காரணமாக பொதுமக்கள் சுமார் ஒரு மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து அதிமுக திருப்பூர் புதிய பேருந்து நிலைய பகுதி கழகச் செயலாளர் முன்னாள் கவுன்சிலர் வானவில் கனகராஜ் தலைமையில திடீரென அந்த கடைக்கு 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடினர்.தொடர்ந்து பொதுமக்கள் நியாயவிலை கடையில் சரிவர பொருட்கள் வழங்கப்படவில்லை எனவும் .நியாய விலைக் கடை ஊழியர் தினமும் கால தாமதமாக வருவதாகவும் மேலும் பொருட்கள் அனைத்தும் சாலையில் வைத்து பொதுமக்களுக்கு வழங்குவதாககுற்றம் சாட்டினர்.சம்பவ இடத்திற்கு குடிமை பொருள் வட்டாட்சியர் உஷாராணி மற்றும் அனுப்பர்பாளையம்போலீசார் வருகை புரிந்து முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில் சிறிதாக உள்ள கடையை வேறு பகுதிக்கு பெரிதாக மாற்றி தருவதாகவும் விற்பனையாளரை மாற்றி தருவதாகவும் உத்தரவு வழங்கியதை அடுத்து முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு காணப்பட்டது.
நியாய விலை கடையில் 50 மேற்பட்டோர் முற்றுகை

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics