கம்பம்.
மாற்றுக் கட்சியில் இருந்து 20க்கும் மேற்பட்டோர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் திமுகவில் இணைந்தனர்
சின்னமனூர் நகர செயலாளர் நா. முத்துக்குமார் தலைமையில் தேனி தெற்கு மாவட்ட பிரதிநிதி பஞ்சாப் முத்துக்குமரன் வழிகாட்டுதலின்படி அதிமுக, அமமுக , ஓபிஎஸ் அணி,நாம் தமிழர் கட்சி மற்றும் மாற்றுக் கட்சியில் இருந்து 20க்கும் மேற்பட்டோர் விலகி தேனி தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ந. இராமகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைத்து கொண்டனர்.உடன் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் சின்னமனூர் நகர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.