நிலக்கோட்டை, அக்.01
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக நியமித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து,துணை முதல்வரான உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தும் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்…
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது, கூட்டத்திற்கு தலைவர் எஸ்பி.செல்வராஜ் தலைமை வகித்தார்,செயல் அலுவலர் பூங்கொடிமுருகு முன்னிலை வகித்தார்,சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் வரவேற்றார்,கூட்டத்தில் மழைகாலம் துவங்கியுள்ளதால் கழிவுநீர் கால்வாய்களை சரிசெய்வது, மழைநீர் தேக்கத்தால் ஏற்படும் டெங்கு,மலேசியா போன்ற நோய்தொற்றுகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது, தொடர்ந்து தமிழக விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக நியமித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து,துணை முதல்வரான உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்,
இந்நிகழ்ச்சியில் துணைத்தலைவர் விமல்குமார், கவுன்சிலர்கள் கருணாகரன்,
முஹமது நசீர்,மாரியப்பன்,கவிதாராஜாங்கம், காசியம்மாள், செல்விசுந்தர்,
சத்தியா மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர் அசோக்குமார், அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்,