அருமனை, பிப்- 28
கருங்கல் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவர் காவல் துறை மதுவிலக்கு பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகனுக்கு
வங்கியில் வேலை வாங்கித் தருவதாக மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்த அப்புகுட்டன் மகன் அசோக்குமார் என்பவர் 6 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் பல மாதங்கள் ஆன பிறகும் வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இதை அடுத்து அருமனை காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அடிப்படையில் நேற்று அசோக் குமாரை போலீசார் கைது செய்தனர். அசோக் குமார் இது போன்று பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக தெரியவந்தது. இவர் கைது செய்யப்பட்டவுடன் இவரிடம் ஏமாந்த பலர் அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
நேற்று முன்தினம் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட தீ பு என்பவரும் அசோக்குமாரும் இணைந்து பல வங்கி அடையாள அட்டைகளை அணிந்து கொண்டு லோன் பெற்று தருவதாகவும் வேலை வாங்கி தருவதாகவும் பலரை ஏமாற்றி இருப்பதும் தெரிய வந்துள்ளது.