நாகர்கோவில் செப் 2
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அகஸ்தீஸ்வரம் பேரூர் செயலாளர் சிவபாலன் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரை தினேஷ், முன்னிலை வகித்தார். இதில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் உரிமை சீட்டை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. உறுப்பினர் உரிமை சீட்டு என்பது தொண்டர்களுக்கும், கட்சிக்கும் ஒரு இணைப்பு பாலமாக அமைந்துள்ளது. இந்த கட்சியில் உழைக்கிறவர்களுக்கு கண்டிப்பாக முக்கியத்துவம் கிடைக்கும். சாதாரண எளிய தொண்டனும் உயர்ந்த பதவிக்குவர முடியும். உழைக்காமல் ஏமாற்றிவிட்டு இந்த கட்சியில் உயர்ந்த பதவிக்கு யாரும் வந்தது கிடையாது. அ.தி.மு.க.வுக்கு பாரதிய ஜனதா கட்சி ஒரு எதிர்க்கட்சி இல்லை. அ.தி.மு.க.வுக்கு ஒரே எதிர்க்கட்சி தி.மு.க. மட்டும் தான். ஆகவே ஆளுகின்ற தி.மு.க. கட்சி மக்களுக்கு எதிராக செயல்படும் போது அ.தி.மு.க. மட்டும் தான் மக்களின் பிரச்சனைக்காக குரல் கொடுக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில அ.தி.மு.க. நிர்வாகி ராஜன், பேராசிரியர் நீல பெருமாள்,ஒன்றிய அவைத்தலைவர் தம்பித்தங்கம், பொருளாளர் தங்கவேல், பேரூர் செயலாளர் டாக்டர் தேவசுதன் ,கவுன்சிலர் விஜயன்,நிர்வாகிகள் ருக்மணி,சிவராஜன்,முத்துகுமார்,விஜயன்,செல்லைய்யா,குணபாலன்,ஜெயராஜ்,பூஜை துரை, கலைவளன்,ஜெயபாலன்,ஆனந்த்,செல்வகுமார்,தேவராஜ்,ஆர்.எஸ்.கண்ணன்,சுகின் உள்பட பலர் கலந்துகொண்டனர்