கருங்கல், ஜன- 31
குமரி மாவட் டம் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் பழுதடைந்து, மிகவும் பழமையாகவும், போதிய இட வசதியும் இன்றியும் காணப்பட்டது. இதனையடுத்து பழுதடைந்து காணப்பட்ட கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய கட்டிடத்தை அகற்றி விட்டு நவீன முறையில் புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும் என்று சட்டமன்றத்தில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், புதிய கட்டிடம் அமைக்க ரூ. 5.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அப்பணியினை ராஜேஷ்குமார் எம் எல் ஏ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஊராட்சி பொறியாளர், ஒன்றிய பொறியாளர் உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.