தென்காசி மாவட்டத்தில் கலைஞரின் விளையாட்டு உபகரணங்கள் 338 கிராம பகுதிகளுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தேசிய அளவிலான போட்டிகளுக்கு இணையாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. 2024-25 – ஆம் ஆண்டில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பல்வேறு புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டு பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர் மாற்றுத்திறனாளிகள் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளின் 27 விளையாட்டுகள் 53 வகைகளில் நடத்தப்பட்டது.
இதே போன்று தென்காசி மாவட்டத்தில் இந்த விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டது.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற 2500 மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மற்றும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்ட விழா தென்காசி ஐ. சி.ஐ. அரசு பள்ளி கூட்டரங்கில் நடந்தது. விழாவிற்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் முதலமைச்சர் கோப்பைக்கான
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து
விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு 18 விளையாட்டுகளுக்கு தேவையான 33 உபகரணங்களை 338 கிராமங்களுக்கு கொண்டு செல்லும் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனி நாடார், சதன் திருமலைக்குமார், நகர்மன்ற தலைவர் சாதிர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி, மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், அமர்சேவா சங்க தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.