திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், ஆய்குடி ஊராட்சியில் நபார்டு வங்கியின் மூலம் ரூ.237.45 இலட்சம் மதிப்பீட்டில் வெள்ளாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட புதிய பாலத்தினை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் திறந்து வைத்தார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன், உடனிருந்தார்.
இந்நிகழ்வில், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் யோகேஸ்வரன், கூத்தாநல்லூர் வட்டாட்சியர் ஜானகி, நீடாமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், உதவி பொறியாளர் வெங்கடேஷ்குமார், ஒப்பந்தகாரர் செந்தில் உள்ளிட்ட அரசு அலுலவர்கள் உடனிருந்தனர்.