ஈரோடு, ஜன.31-
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தி.மு.க. வேட்பாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஈரோட்டில் நடைபெற்றது. கூட்டத் துக்கு தலைவர் வி.கே.ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பி.ரவிச்சந்திரன் வரவேற்றார்.
கூட்டத்தில் அமைச்சர் சு.முத்துசாமி தி.மு.க. வேட் பாளர் வி.சி.சந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
அப்போது அமைச்சர் முத்துசாமி பேசியதாவது:-
வணிகர்கள் சார்பில் பல கோரிக்கைகள் முன் வைக்கப் பட்டுள்ளன. இதில் அவசர தேவை உள்ள கோரிக்கைகளை முதன்மைப்படுத்தி கொடுத்தால் விரைவில் தீர்வு காணப்படும். சோலார் பஸ் நிலையம் அமைந்தால் தொழில் வளர்ச்சி மேம்படும். தமிழகத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையிலான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இந்த இடைத் தேர்தலில் நீங்கள் யாருக்கு
வாக்களிக்க உள்ளனர் என்று ஏற்கனவே முடிவு செய்து இருப்பீர்கள். தி.மு. க வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை அனைவருக்கும் நன்கு தெரியும். அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டமைப்பினர் உள்பட பல்வேறு சங்கத்தின் சார்பில் அமைச்சர் முத்துசாமியிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
இந்த கூட்டத்தில் கே.இ பிரகாஷ் எம்.பி., தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர் முடிவில் கூட்டமைப்பின் பொருளாளர் முருகானந்தன் நன்றி கூறினார்.



