கருங்கல், ஜன – 26
மிடாலக்காடு அரசு நூலக வாசகர் வட்டம் சார்பில் நூலகத்தில் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை இயக்கம் நேற்று 25-ம் தேதி நடைபெற்றது. வாசகர் வட்ட தலைவர் எம்.ஏ.சாந்தகுமார் தலைமை தாங்கினார். நூலகர் ஜெரால்டு வரவேற்று பேசினார். பாலப்பள்ளம் பேரூராட்சி தலைவர் டென்னிஸ் புத்தக கண்காட்சியை திறந்து வைத்து பேசினார்.
முதல் விற்பனையை டாண்போஸ்கோ மெட்ரிகுலேசன் பள்ளி தாளாளர் ஜாண்றாபின்சன் வழங்க திக்கணங்கோடு ஜேபிஆர் மகால் உரிமையாளர் ஜஸ்டின் பெனடிட் ராஜ் பெற்றுக்கொண்டார். முன்னாள் பேரூராட்சி தலைவர் கில்டா ரமணிபாய், துணைத்தலைவர் மோகன்சந்திரகுமார் ,செல்வி ஜாண்ஆர்க்,சோபனராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
நிகழ்வில் வார்டு உறுப்பினர்கள் வேலாண்டி, ஜெயபாரதி, சுபிதா ,தலைமை ஆசிரியர் ஜெபமதி, போதகர் நவதீபம், ஜார்ஜ், பென்னட் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். பாரதி புத்தகாலய பொறுப்பாளர் பழனிசாமி நன்றியுரை ஆற்றினார்.