கோவை ஜூன்: 19
தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் TCTU நிறுவனத் தலைவர்.N. நஞ்சப்பன் அவர்களின் 8வது நினைவு நாளை முன்னிட்டு மதுக்கரை ஐ.என்.டி.யு.சி அலுவலகத்தில் அவரது திரு உருவச் சிலைக்கு மலர் அஞ்சலி மற்றும் அக்ஷரா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் மாநிலத் தலைவர் புவனேஸ்வரி நஞ்சப்பன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் INTUC தலைவர் துளசிதாஸ், கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பகவதி ஆகியோர் துவக்கி வைத்தனர் INTUC நிர்வாகிகள் பாசமலர் சண்முகம், ரங்கநாதன், சுப்பிரமணியம், வடிவேல், லோகநாதன், வினோத் குமார், வேலுச்சாமி, தேவிகா கோவிந்தராஜ், சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகளும், காங்கிரஸ் கமிட்டி நகர தலைவர் சிவசுப்பிரமணியம் மாவட்ட துணை தலைவர்கள் மதுசூதனன் மற்றும் ,நிர்வாகிகளும், கோவை தெற்கு மாவட்ட மனித உரிமை துறை மாவட்ட செயலாளர் மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



