நாகர்கோவில் அக் 20
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட செம்மாங்குடி சாலை முதல் கோட்டார் காவல்நிலைய சாலை வழியாக செயின்ட் ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி வரையுள்ள சாலைகளில் நடைப்பாதை மற்றும் மழைநீர் ஓடைகளை மேயர் மகேஷ், மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் இணைத்து ஆய்வு மேற்கொண்டு சாலைகளின் இருபுறங்களிலும் இருசக்கர வாகனங்களை நிறத்தி வைத்தல்
மற்றும் கடைகளிலுள்ள பொருட்களை நடைபாதைகளில் வைத்தல் போன்ற பொதுமக்களுக்கு இடையூறான இடர்பாடுகளை அகற்றிடவும் மழைநீர் ஓடைகளை சீரமைக்கவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். உடன் மண்டலத்தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, சுகாதார அலுவலர் முருகன்,மாமன்ற உறுப்பினர் றோஸிட்டா மற்றும் மாநகர செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த்,பகுதி செயலாளர் துரை,செயற்குழு சதாசிவம் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.