மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி யின் அறிவுறுத்தலின் பேரில் இளம் தலைவர் ராகுல் காந்தியின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அறிவுத்தின்படி தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் இயக்கம் கிராமப்புறங்களில் சிறப்பாக கட்டமைக்க அனைத்து மாவட்ட செயலாளருக்கும் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் எஸ் ராஜ்குமார் எம்எல்ஏ தலைமையில் சிறப்பு அழைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் ஆர் சுதா கலந்து கொண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட மண்டல பொறுப்பாளர் அசோகன் மற்றும் பாராளுமன்ற பொறுப்பாளர் ஜி ராஜேந்திரன் மயிலாடுதுறை மாவட்டத்தின் பொறுப்பாளர் தங்கமச்செல்வன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் வட்டார தலைவர்கள் நகரத் தலைவர்கள் மூத்த நிர்வாகிகள் முன்னணி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். கிராம செயலர் கூட்டம் எப்போது அமைக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் மயிலாடுதுறை பொறுத்தவரை மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நியமித்துள்ளது. இதில் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சரத் சந்திரன் , மூங்கில் ராமலிங்கம், நவாஸ், பூம்புகார் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பண்ணை சொக்கலிங்கம் , பானு சேகர், அன்பு சீர்காழி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சிவராமன் கிள்ளிவளவன் நியமித்து ஆலோசனை வழங்கினர்.