கீழக்கரை ஜூலை3
.இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மாயாகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துராஜ் நகரில் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி பாக்கியநாதன் தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. துணை தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.ஊராட்சி செயலர் ஜெயபாரதி அனைவரையும் வரவேற்றார். பற்றாளராக கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக ஓவர்சீர்செந்தில்குமார் பார்வையாளராககலந்துகொண்டார். கலைஞரின் கனவுயில்லம் திட்டத்தின் கீழ் வீடு கேட்டு மொத்தம் 30 மனுக்கள் பெறப்பட்டன. சிறப்பு கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். முடிவில் ஊராட்சி உறுப்பினர் இராஜேஸ்வரி நன்றி கூறினார்.