புதுக்கடை, மார்- 7
புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதி பொத்தியான் விளை என்ற இடத்தை சேர்ந்தவர் ஜாண்றோஸ் மனைவி றோஸ்லி (65). இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. இருவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். சம்பவ தினம் ஜாண்ரோஸ் வேலைக்கு சென்ற பின் றோஸ்லி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரது வீட்டில் பாதிரியார் என்ற பேரில் ஒருவர் நுழைந்துள்ளார்.
பின்னர் திடீரென ஆயுதத்தை காட்டி றோசிலியை மிரட்டி வீட்டில் உள்ள பணம் மற்றும் நகைகளை கேட்டுள்ளார். அவர் நகை ஒன்றும் இல்லை என கூறியுள்ளார். பின்னர் அந்த மர்ம நபர் அத்துமீறி வீட்டில் இருந்த 3 ஆயிரம் ரூபாயை எடுத்து சென்றுள்ளார். இது குறித்து றோசிலி புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து நேற்று 5-ம் தேதி வழக்கு பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.