ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதிகளில் மக்காச்சோள விளைச்சல் அமோகம் ,விவசாயிகளுக்கு சமசீர் விலை கிடைக்க அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டுமென கோரிக்கை*
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் ஐந்தாயிரம் ஏக்கருக்கு மேலாக மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர்.
குறிப்பாக ஊத்தங்கரை பகுதிகளில் காரப்பட்டு,கதவனி,பெரிய கவுண்டனூர் கிராமம் மற்றும் போச்சம்பள்ளி பகுதிகளில் ஜம்புகுட்டப்பட்டி, ஜிம்மாண்டியூர், புளியம்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் ஆண்டுதோறும் மக்காச்சாலும் பயிரிடு வருகின்றனர்.
இந்த மக்காசோளத்தை சின்ன சின்ன வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றன கடந்த ஆண்டு சராசரியாக ஒரு மக்காச்சோளத்தின்
விலை நிலத்திலேயே 2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 4 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை விலை போவதாகவும் கூறுகின்றன.
ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் பயிரிடும் செலவானது கூடுதலாகி கொண்டே இருப்பதால் சரியான இலாபம் கிடைப்பதில்லை.மேலும் ஒவ்வொரு விவசாயிகளிடமும் வியாபாரிகள் ஏற்றம் இறக்கமான விலையில் கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு சம சீரான வருவாய் கிடைக்கவில்லை அதனால் வரவிற்கும் செலவிற்கும் போதுமானதாக உள்ளது எனவே அரசே மக்காசோளங்களை நேரடியாகவே கொள்முதல் செய்து அனைவருக்கும் சமசீரான வருவாய் கிடைக்க ஆவணம் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.